பாரதமாதா கோவிலில் அத்து மீறி நுழைவு.. பாஜக மாநில துணைத்தலைவர் அதிரடி கைது.!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் கடந்த 11ஆம் தேதி பாஜகவினர் சுதந்திர தின விழா பேரணி நடத்தினர். இதில், பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இந்த ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பாரத மாதா கோவிலுக்குச் சென்று மாலை போட முயற்சித்தனர். ஆனால், கோவில் பூட்டப்பட்டு இருந்தது. கோவில் காப்பாளரிடம் திறக்க சொல்லி கேட்டபோது அவர் அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து இன்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp sub leader arrested in dharmapuri


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal