திமுக கொடியை எரித்த தலைமை காவலர்... மகளின் பாதத்தை நிரந்தரமாக இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் கண்ணீர் போராட்டம் - பாஜக இளைஞரணி தலைவர்! - Seithipunal
Seithipunal


பாஜக இளைஞரணி மாநிலத்தலைவர் SG சூர்யா விடுத்துள்ள கண்டன செய்தியில், "நெஞ்சை உலுக்கும் கொடூரம்! தவறான மருத்துவ சிகிச்சையால் தனது சொந்த மகளின் பாதத்தை நிரந்தரமாக இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் கண்ணீர் போராட்டம் இது!

பல ஆண்டுகளாக நீதி கேட்டும் கிடைக்காத விரக்தியில், இன்று வீதிக்கு வந்து ஆளும் கட்சியின் கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் ஒரு காவல்துறை அதிகாரி. இந்த விடியா திமுக ஆட்சியில் ஒரு காவலருக்கே இந்த கதி என்றால், சாதாரண சாமானிய மக்களின் நிலை என்ன?

மக்களின் உயிரோடும் உறுப்புகளோடும் விளையாடுவது தான் திராவிடமாடல் ஆட்சியா முக ஸ்டாலின் அவர்களே? நியாயம் கேட்டுப் போராடும் ஒரு கண்ணீர் வடித்த தந்தையை, சக காவலர்களை வைத்தே அடக்குமுறை செய்வது தான் உங்கள் சாதனையா?

பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்! அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP SG Surya condemn to dmk mk stalin


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->