"கீறல் விழுந்த ரெக்கார்டு" ஸ்டாலினின் விமர்சனத்திற்கு எடப்பாடியின் பதிலடி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையேயான வார்த்தைப் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரக் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவியைப் பெறுவதற்காகக் காலில் விழுந்ததை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார். இதற்கு சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (EPS) ஆவேசமாகவும், தர்க்கரீதியாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலினின் விமர்சனங்களைக் "கீறல் விழுந்த ரெக்கார்டு" என்று கிண்டல் செய்த எடப்பாடியார், ஒரு முதலமைச்சராகத் தனது சாதனைகளைப் பற்றிப் பேசத் திராணி இல்லாமல் ஸ்டாலின் தனிநபர் விமர்சனங்களில் இறங்கியுள்ளதாகச் சாடினார். "மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு, எப்போது பார்த்தாலும் நான் காலில் விழுந்ததைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். உங்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தது எதற்கு? செய்த சாதனைகளைச் சொல்லுங்கள், அதை விடுத்து பழைய கதையைப் பேசுவதில் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது செயலுக்குக் கலாச்சார ரீதியான விளக்கத்தை அளித்த அவர், "ஒரு பதவி அல்லது பொறுப்பு கிடைக்கும்போது பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பாடு. இதில் என்ன தவறு இருக்கிறது? பண்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆசீர்வாதம் வாங்குவதன் மகத்துவம் தெரியும்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS Defends His Actions Against Stalins comment


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->