லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் எதிரொலி; ட்ரம்புக்கு புது தலைவலி; ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடிய ஈரான்..! - Seithipunal
Seithipunal


கடந்த நாட்களில் இஸ்ரேல் படைகள் பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது கிட்டத்தட்ட 100 இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியத்தில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 700-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இதிலு ஈரானின் உச்சத் தலைவர் கொள்ளட்டார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் அமெரிக்காய் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

அத்துடன், ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஒட்டுமொத்த ஈரானும் ஓர் இரவுக்குள் அழிக்கப்படும்'' என ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்திருந்தார். ஆனாலும் ஈரான் பிடிவாதம் காட்டியா நிலையில்,  இதற்கிடையே பாகிஸ்தான் இருதரப்பிலும் மத்தியஸ்தம் செய்தது.

இந்த கெடு முடிய சரியாக, 90 மணிநேரம் இருந்த நிலையில், இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.  அத்துடன், ஈரான் 10 அம்ச திட்டங்களையும் வலியுறுத்தி இருந்தது. அதில், லெபனான் - காஸா - ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிகையாக வைத்திருந்தது. இதனை அமெரிக்கா பரிசீலனை செய்வதாக கூறியிருந்தது. 

இதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஆதரித்ததுடன், லெபனான் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் இந்த உடன்படிக்கையில் பொருந்தாது என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

லெபானான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் குறிவைத்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவருடைய தனிப்பட்ட செயலாளரும், அவரது மருமகனுமான அலி யூசுப் கர்ஷியும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலைத் தொடர்வதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணைப் பாதையை மூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக அமெரிக்கா, இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In retaliation for Israel's attack on Lebanon Iran has once again closed the Strait of Hormuz


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->