பாஜக எம்பி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் பாஜக எம்பியாக இருப்பவர் ராம்விசார் நேதம். இவரது வீடு சுர்குஜா மாவட்டத்தில் அம்பிகாபூர் நகரில் உள்ளது. இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாவலர்கள் வீட்டை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போதிலும் மர்ம நபர்கள் சிலர் உள்ளே சென்று வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அதன்பிறகு வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து அம்பிகாபூர் நகர் காவல் துறையினர் அகிலேஷ் கவுசிக் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP Home Robbery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->