அடுத்த விக்கெட் காலி... அரசியலில் இருந்து விலகிய 3வது பாஜக எம்பி.!! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பையுமான கௌதம் கம்பீர் அறிவித்த நிலையில் அவரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்ரை சேர்ந்த பாஜக எம்.பி ஜெயந்த் சின்ஹா அரசியலில் இரந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அடுத்தடுத்து பாஜக எம்பிக்கள் அரசியலில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்பியுமாக இருக்கும் ஒருவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக எம்பியும் மத்திய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரிசியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியல் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். 

தற்போது அவர் எம்பி யாக இருக்கும் டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருக்கலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP mp former health minister harshvardhan quite from politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->