பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசிர்வாதம் கிடைக்காது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் கிடைக்காத பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே‌.பி.நட்டா கர்நாடகா மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் கிடைக்காது. பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் உங்களுக்கு வேண்டுமென்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இவருடைய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader JP Natta controversy speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->