சென்னை பாஜக அலுவலகத்தில் நடந்த சம்பவம்! சிக்கலில் எல் முருகன் உள்ளிட்ட 3 பேர்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முகப்பேர் நகரை சேர்ந்த குகேஷ் என்பவர் இன்று தாக்கல் செய்த மனுவில், "கடந்த சுதந்திர தினத்தன்று தி நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தின் மாநிலத் தலைவர் எல் முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகள் அக்கட்சியின் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த சுதந்திர தின விழாவில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில், இந்திய தேசியக் கொடியை ஏற்றி அவமரியாதை செய்த பாஜக தலைவர் எல் முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல கணேசன் ஆகியோர் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி புகார் அளித்துள்ளேன்.

பாரதிய ஜனதா கட்சிக் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது தேசியக் கொடி விதிகள் மற்றும் தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றமாகும். எனவே  எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp l murugan indian flag issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->