அனுமதியின்றி பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மதுரை மேரியாட் ஹோட்டலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 

மேலும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், சுதாகர் ரெட்டி, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், துணைத்தலைவர் ஜெயவேல், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், இளைஞரணி செயலாளர் பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காக மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரங்கிற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட பேனர் வைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executives file case against 25 for displaying banner without permission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->