தமிழகத்தில் பாஜக படுதோல்வி! அறிக்கை கேட்கும் டெல்லி மேலிடம்!நயினார் மாற்றமா? மீண்டும் அண்ணாமலை தலைவர்? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை ஆராய தேசிய தலைமையகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களமிறங்கினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், மகாராஷ்டிர முதல்வர் தேவೇಂದ್ರ பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஆனால் தேர்தல் முடிவில், ஊட்டி தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மற்ற 26 தொகுதிகளிலும் கட்சி தோல்வியை சந்தித்தது. ஊட்டியில் கிடைத்த வெற்றியும் சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் டெல்லி பாஜக தலைமையகம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி ஏன் குறைந்தது? கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது ஏன் பின்னடைவு ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தமிழக பாஜகவில் தனி ஆய்வு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழு, வேட்பாளர் தேர்வு முதல் கூட்டணி அரசியல் வரை அனைத்தையும் ஆய்வு செய்து தேசிய தலைமைக்கு அறிக்கை அளிக்க உள்ளது.

குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்து, வாக்கு சதவீதத்தை உயர்த்தியிருந்தது. ஆனால் தற்போது சட்டசபை தேர்தலில் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகளை கூட பெறாதது தலைமையகத்தை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். “இளைஞர்களிடம் தாக்கம் செலுத்தும் திறன் அண்ணாமலைக்கு உள்ளது” என்பதால், அவரை மீண்டும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் தரப்பில், “தோல்வி வந்தால் அதன் காரணங்களை ஆராய்வது இயல்பான அரசியல் நடைமுறை. அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த ஆய்வு அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP defeat in Tamil Nadu Delhi high command asks for report Will Nayinar be replaced Annamalai leader again


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->