#BigBreaking || இரு பாஜக முதலமைச்சர்கள் பெரும் பின்னடைவு.! அதிர்ச்சியில் பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், 

இந்நிலையில், கோவா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை (10 AM) நிலவரபடி, பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த், பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பது, பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன

இதேபோல், உத்தரகாண்ட் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை (10 AM) நிலவரபடி, பாஜக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பின்னடைவை சந்தித்து இருப்பது, பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.


மற்ற 3 மாநிலங்களில் காலை 10 மணி முன்னிலை நிலவரப்படி 

உத்தர பிரதேசம் : 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக தற்போதுவரை பெருபான்மைக்கு தேவையான இடங்களை தண்டி முன்னிலை பெற்று வருகிறது.

பாஜக 226, சமாஜ்வாதி 103, பகுஜன் சமாஜ் 6, காங்கிரஸ் 8, மற்றவை 3


பஞ்சாப் : 117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருக்கிறது.

ஆம் ஆத்மீ 84, காங்கிரஸ் 18, எஸ்.ஏ.டி 8, பாஜக 3, மற்றவை 1


இழுபறி : மணிப்பூர் 

60  சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் பெருபான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு முன்னிலை பெறவில்லை.

பாஜக 25, காங்கிரஸ் 12, மற்றவை 14, என்.பி.பி 9 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp cm s down in election counting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->