தமிழக பாஜக வேட்பாளர் யார்? வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் குழுவினர் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய பாஜக மையக் குழுவிடம் சமர்ப்பித்தனர்.

டெல்லி செல்லும் முன் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாஜக தலைவர் ஜெ.பி நட்டா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தமிழக வேட்பாளர்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் இரண்டாவது பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர் இடம்பெறக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Central committee diside tn candidate today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->