இந்துக்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? கர்நாடக முதல்வரை போட்டு தாக்கும் பாஜக.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா விஜயபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் விழாவில் பங்கேற்றச் சென்றபோது கோவில் உள்ள வருமாறு அங்கு இருந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அவர் உள்ளே செல்ல மறுத்து வெளியில் இருந்து ஆர்த்தி மற்றும் பூமாலையை ஏற்றுக் கொண்டு வழிபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சித்தராமையா இந்து விரோதி என பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி "கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மந்திரியும், பூசாரி கோயிலுக்குள் வந்து கடவுளை தரிசனம் செய்ய கோரிய போதிலும் கோயிலுக்குள் நுழைய மறுக்கிறார். அதே சித்தராமையாவுக்கு தர்காவில் மதரீதியாக கும்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ராமர் கோவில் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள இந்து காரியகர்த்தாக்களை முதல்வர் சித்தராமையா குறிவைத்ததில் ஆச்சரியமில்லை. இந்துக்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp ask to siddaramaia Why so much hatred towards Hindus


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->