திமுகவின் ஐந்து கட்சி அம்மாவாசைக்கு, அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில், சேலம் - மதுரை புறவழிசாலையில் " கோ பேக் மோடி " என்று திமுக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இது போன்ற சுவரொட்டிகள் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டு இருந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக, நவம்பர் 11 ஆம் தேதி பாஜக கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளாமல் காலம்தாழ்த்தி வந்த நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி அரவக்குறிச்சியில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, " கோ பேக் மோடி என்று வாசகம் எழுதிய விளம்பரத்தை நவம்பர் 24 ஆம் தேதிக்குள் திமுகவினர் அழிக்க வேண்டும். அவ்வாறு அதனை செய்யாத பட்சத்தில், நாங்களே முன்வந்து விளம்பரங்களை அழிப்போம்.

அதில், " ஐந்து கட்சி அம்மாவாசை " மற்றும் " சுடலை ராஜா " என்று எழுதுவோம். பிரதமருக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றால் கரூரில் அரசியல் செய்ய முடியாது. நேர்மையான அரசியலுக்கு வாருங்கள் " என்று பேசினார். இந்த சூழ்நிலையில், தற்போது பாஜகவினர் ஒருபுறம் கோ பேக் மோடி வாசகத்தை நீக்கி வரும் நிலையில், திமுகவினரும் இதனை நீக்க துவங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Warn directly to Aravakurichi Consultancy DMK MLA Senthil Balaji


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal