நாசருக்கு வாய் கோளாறு! ஸ்டாலினுக்கு நிர்வாக கோளாறு! திமுகவை போட்டு தாக்கிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதை செய்கிறதோ இல்லையோ ஒவ்வொரு துறையிலும் பார்த்து பார்த்து விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது பின்னர் சொத்து வரி, குடிநீர் வரி, பெட்ரோல் டீசல் விலை, ஆவின் பொருள்கள் விலை, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி விட்டனர். 

திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஆவின் பொருட்களின் விலையை மூன்று முறை உயர்த்தி விட்டார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் விளம்பரப்படுத்தக்கூடிய நபராக மாறி உள்ளார். அவருக்கு விளம்பரமேனியா எனும் நோய் வந்திருக்கிறது. தமிழக அரசு பாலின் கொள்முதல் விலையை 32 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஆனால் பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி உள்ளது.

ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தி உள்ள நிலையில் இடையில் இருக்கக்கூடிய 12 ரூபாய் எங்கு செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதுக்கு பெயர்தான் திராவிடர் மாடல் ஆட்சி. தமிழக விவசாயிகளிடமிருந்து பாலை வாங்கி பதப்படுத்தி விற்பனை செய்வதற்கு 40 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள். இதனால்தான் ஆவின் நிறுவனம் இன்று நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு 32 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 4 லட்சம் லிட்டர் கொள்முதல் குறைந்ததே ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம். பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு வாய் கோளாறு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் ஸ்டாலினுக்கு நிர்வாகத்தில் கோளாறு ஏற்படுகிறது" என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp Annamalai criticized Minister Nasar and cm Stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->