புல்டோசர் முன் சைக்கிள் நிற்க முடியாது..உ.பி தேர்தல் வெற்றி குறித்து-பாஜக எம்பி.! - Seithipunal
Seithipunal


403 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், தற்போதைய நிலவரப்படி, ஆளும் கட்சி பாஜக 270 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சியி 120 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் பாஜக எம்பி ஹேமமாலினி செய்தியாளரிடம் இன்று பேசும்போது, உத்திரபிரதேசத்தில் எங்களுடைய அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஒவ்வொரு வளர்ச்சிக்கான விஷயங்களிலும் நாங்கள் பணியாற்றி உள்ளோம். அதனாலேயே பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

புல்டோசருக்கு முன் எதுவும் வர முடியாது. அது சைக்கிள் ஆகட்டும். அல்லது வேறு எதுவாகவும் இருக்கட்டும் ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்துவிடும் என கூறியுள்ளார்.

சைக்கிளை தேர்தல் சின்னமாக கொண்ட சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்பு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புல்டோசர் பாபா என அழைத்துள்ளார். இதுபற்றி தேர்தல் கூட்டம் ஒன்றில் யோகி பேசும்போதுகூட விரைவு சாலை அமைக்க பயன்படும் புல்டோசர், குற்றவாளிகள் கொண்ட மாபியா கும்பலை அழிக்கவும் சிறந்த ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bicycle can not stand in front of the bulldozer UP election victory BJP MP


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->