வங்கதேச சட்ட விரோத குடியேறிகளை அப்புறப்படுத்தும் பணியை தீவிரப்படுத்திய இந்தியா!
Bangladesh Miscreants india action
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச குடிமக்கள் எதிராக பல்வேறு மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நாட்டின் உள்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, சட்டவிரோதமாக உள்ளூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டு குடிமக்களை மத்திய அரசு அடையாளம் கண்டு நாடு கடத்தி வருகிறது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள், வங்கதேசத்தவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒடிசாவில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கடலோர காவல் பிரிவுகளுக்கு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த செயலுக்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் இதுவரை 766 பேர் கைது செய்யப்பட்டு, 300 பேர் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 1,008 பேர் பிடிபட்டுள்ளனர்; இதில், 148 பேர் முதற்கட்டமாக மேற்கு வங்கம் வழியாக நாடு கடத்தப்படவுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் ஊடுருவல் பெரும் சவாலாக உள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து ரோஹிங்கியர் மற்றும் வங்கதேச குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் கூறினார்.
English Summary
Bangladesh Miscreants india action