சட்டமன்றத் தேர்தல் களம்: 10 பேர் பிரசாரக் குழுவை அறிவித்த தவெக தலைவர் விஜய்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களின் ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில், தவெக தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழுவை அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தும் வகையில், பின்வரும் அமைப்பில் தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள்:
N. ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா, B.A
K.A. செங்கோட்டையன்
A. பார்த்திபன்
B. ராஜ்குமார், DME
K.V. விஜய் தாமு
S.P. செல்வம், DCE
K. பிச்சைரத்தினம் கரிகாலன்
M. செரவு மைதின் (எ) நியாஸ்
J. கேத்ரின் பாண்டியன், M.A., B.Ed.
இந்த குழு, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இக்குழுவின் செயல்பாடுகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தவெக தலைவர் விஜய் தனது அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assembly election arena Tamilaga Vetri Kazhagam leader Vijay announce 10 member campaign committee


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->