அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் - Seithipunal
Seithipunal


இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை தான் இந்த அமலாக்கத்துறையின் சோதனை என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் பதிவில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது.

இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal condemns raid at Minister Ponmudi house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->