களத்தில் இறங்க ரெடியா...? முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு இன்று முதல் ரெஜிஸ்ட்ரேஷன்... விண்ணப்பிப்பது எப்படி...? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோருக்கான இணையவழி பதிவு இன்று (ஆகஸ்ட் 6) முதல் தொடங்கியுள்ளது. மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவுகளில் நடைபெறவுள்ள 45 விளையாட்டுப் பிரிவுகளுக்கான போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவுகளில் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பதோடு, அனைத்து தரப்பு மக்களையும் விளையாட்டில் ஈடுபடுத்தி, திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரமும் ஊக்கமும் வழங்குவதே இந்தப் போட்டிகளின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தாண்டு போட்டிகள் செப்டம்பர் 4-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்படுகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 விளையாட்டுப் பிரிவுகளுடன், இந்த ஆண்டு வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்கிங் மற்றும் கேனோயிங் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்தம் 45 வகையான போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளன.இந்தப் போட்டிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் கல்வி பயிலும் மாணவர்கள், 15 முதல் 35 வயதுடைய பொதுப் பிரிவினர், அனைத்து வயதுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுவோருக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடத்திற்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடத்திற்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்படும்.மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணியினருக்கு தலா முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் தாங்களாகவோ அல்லது தங்களது பள்ளி, கல்லூரிகள் மூலமாகவோ tncmtrophy.sdat.in இணையதளத்தில் பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம். மேலும், "ஆடுகளம்" தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you ready to take field Registration Chief Minister Cup sports competition starts today How to apply


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->