திமுகவை கேள்வி கேட்டால், பாஜக, அதிமுகவிற்கு மட்டும் அறிவு இருக்கிறதா என்பார்கள்.. கடுப்பான அறப்போர் இயக்கம்!
arappor iyakkam condemn to DMK ADMK BJP
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள கண்டன செய்தியில், "இப்படி ஜிஎஸ்டி சாலை முழுதும் சட்டவிரோத பேனர் மற்றும் மீடியனில் உயிர்களை பறிக்கும் ஆபத்தான கொடி என்று அராஜகம் செய்யும் திமுகவை கேள்வி கேட்டால், அதிமுகவிற்கு மட்டும் அறிவு இருக்கிறதா, பாஜகவிற்கு மட்டும் அறிவு இருக்கிறதா என்று பதில் சொல்வார்கள்.
கடைசி வரைக்கும் இவர்களுக்கு அறிவு இருக்கிறதா என்பதை சொல்லவே மாட்டார்கள். இருந்தால்தான் இதை வைக்க மாட்டார்களே!
சுபஸ்ரீ உயிரிழந்த போது முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் அவர் தாய் தந்தையை சந்தித்து பேசியதை இந்த நேரத்தில் அவர்கள் நினைவு கொள்ள வேண்டும்.
தேர்தல்கள் போகலாம் வரலாம்... உயிர்கள் அப்படியல்ல" என்று தெரிவித்துள்ளது.
English Summary
arappor iyakkam condemn to DMK ADMK BJP