SP வேலுமணி ஊழல்கள்... முதல்வர் விஜய் கவனத்திற்காக பறந்த பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஊழல்கள் மீது அறப்போர் புகாரில் புதிய ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய விவரங்கள்.

1. சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் 98 கோடி குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. SP வேலுமணி மீதான நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் சபாநாயகர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். 2 IAS அதிகாரிகளுக்கான நீதிமன்ற விசாரணை ஒப்புதலை (கந்தசாமி மற்றும் விஜய்கார்த்திகேயன் IAS) மத்திய அரசுக்கே அனுப்பாமல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கீழ் வேலை செய்த பொது துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் IAS 20 மாதம் கால தாமதம் செய்தார். அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பிறகு வேறு வழி இல்லாமல் நவம்பர் மாதம் 2025 இல் அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். 7 மாதங்களாக மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்து அடித்து கொண்டு இருக்கிறது. எங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சட்ட போராட்டம் தொடர்கிறது.

2. அறப்போர் தொடுத்த ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம் சாண்ட் ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது FIR மட்டும் போட்டு விட்டு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யாமல் திமுக அரசு தனது காலத்தை முடித்தது. இதில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.

3. அறப்போர் புகாருக்கு பின் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் FIR மட்டும் போட்டு விட்டு அதன் மீது இன்று வரை குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் IAS அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் இதன் மீது நீதிமன்ற விசாரணை அனுமதி பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி போதுமானது. அதை கூட திமுக அரசு செய்ய தவறியது.

முதல் ஒரு வருடம் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த 4 வருடம் SP வேலுமணி ஊழல்களை காப்பாற்ற திமுக அரசு பெரிதும் போராடி லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அழுத்தம் கொடுத்தது. இதை மீறி தான் அறப்போர் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடி முதல் புகாரில் குற்றப்பத்திரிக்கை வரையும் இரண்டாம் புகாரில் FIR ம் பதிய வைத்தது. திமுக அரசும், பாஜக அரசும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி சம்பந்தமான ஊழல்களை காப்பாற்றியது போல புதிய அரசு காப்பாற்றப் போகிறதா ? அல்லது ஊழல் ஒழிப்பு என்பது சொல் அல்ல செயல் என்று நிரூபிக்குமா ?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arappor iyakkam admk sp velumani tvk vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->