#BREAKING : அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் வருமான வரிதுறை தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர்.

வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையால் அதிமுக வட்டாரங்கள் பயத்தில் உறைந்து போய் உள்ளன. ஏற்கனவே இரண்டு முறை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anti-corruption department raids houses of former ADMK ministers SB Velumani, C Vijayabaskar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->