நேரம்‌ குறித்த பாஜக.. ஜி.கே‌ வாசனை‌ சந்திக்கும் முக்கிய புள்ளி.!! பரபரக்கும் அரசியல்.! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டிற்கான பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசனையை நேற்று மாலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி பல்லடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனை அண்ணாமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.

இன்று மாலை ஜி.கே வாசனை சந்திக்கும் அண்ணாமலை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பொது தேர்தல் தொகுதி பங்கீடு மற்றும் நிறைவு விழாவில் பங்கேற்பது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெறுவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai meets gkvasan today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->