அந்த Sir யார்? ரகசியமாக கிடைத்த ஒரு தகவல்!
Anna University Student Abuse case shocking update
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுடன் தொடர்பில், மற்றொரு நபர் இருந்ததாக மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் புழல் சிறையில் அடைக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மாணவி கொடுத்துள்ள வாக்குமூலம் குறித்து வெளியான தகவலின்படி,
தன்னை மிரட்டிக் கொண்டிருந்தபோது ஞானசேகரனை ஒருவர் செல்போனில் அழைத்ததாகவும், அவரிடம் "நான் அவளை மிரட்டி விட்டுவிடுவேன்" என ஞானசேகரன் கூறியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
"அந்த SIR கூடவும் கொஞ்ச நேரம் நீ இருக்க வேண்டும்" என ஞானசேகரன் தன்னை மிரட்டியதாக மாணவி வாக்குமூலம்.
காதலன் தன்னிடம் பேசிக் கொண்டிருந்த வீடியோவை டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பிக்கப் போவதாகவும், வீடியோவை காண்பித்தால் உங்கள் இருவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கிவிடுவார்கள்" எனவும் ஞானசேகரன் மிரட்டியதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது உண்மை எனில், யார் அந்த sir? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கும் மறைமுகமாக போலீசார் தரப்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, குற்றவாளி மாணவியை மிரட்டும் போது யாரிடமும் செல்போனில் பேசவில்லை என்றும், அப்போது அவரின் போன் பிளைட் மோடில் இருந்ததாக குற்றவாளியே சொன்னதாக சொல்கின்றனர்.
இதற்கிடையே குற்றவாளி ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் தலைவர் கோவை சத்யன்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பதற்கான முதல்கட்ட ஆதாரம்.



ஞானசேகர் சைதை கிழக்கு பகுதி துணை அமைப்பாளர். இதற்க்கு பதில் இருக்கா என்று அமைச்சர் ரகுபதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Anna University Student Abuse case shocking update