அடங்காத அனிதா ராதாகிருஷ்ணன்! எம்ஜிஆரும் நீயும் ஒண்ணா..மீண்டும் விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்!
Anita Radhakrishnan criticized Vijay using the singular form of address
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள், தேர்தல் பிரசாரம் மற்றும் ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெறாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது என்றும், எம்.ஜி.ஆரின் மக்கள் நலப் பணிகளை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
பேச்சின்போது, "உடனே யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் த்ரிஷாவை சொல்கிறேன் என்று யாராவது தப்பாக நினைக்காதீர்கள். எந்த பெண்களுக்காவது உதவி செய்திருக்கிறாரா?" என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதும், அவரது கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தவெக மீது முன்வைக்கப்பட்டு வரும் குதிரைப் பேரம் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், "குதிரைப் பேரம் செய்வது யார்? திமுகவா, தவெகவா?" என்று விமர்சித்தார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தக் கருத்துகள் அவரது அரசியல் விமர்சனங்களாகும். அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தவெக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
இதற்கு முன்பும் முதல்வர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவை தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது வெளியான இந்தப் பேச்சும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், இதுகுறித்து தவெக மற்றும் திமுக தரப்புகளின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Anita Radhakrishnan criticized Vijay using the singular form of address