எடப்பாடிக்கு அமித் ஷா உத்தரவு? விஜய் சொன்னதை கேளுங்க.. இல்லைன்னா இப்படித்தான் நடக்கும்! எடப்பாடிக்கு செக் வைக்கும் டெல்லி?
Amit Shah order for Edappadi Listen to what Vijay said or else this is what will happen Will Delhi deposit a check for Edappadi
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பெரிய அரசியல் பணியை ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது — நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சேர்க்க வேண்டும் என்பதுதான்.
அதிமுக வட்டார தகவல்களின் படி, அமித் ஷா தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசி மூலம் பேசியதாக கூறப்படுகிறது. அந்த உரையாடலில், “விஜயை எந்த விதத்திலாயினும் சம்மதிக்க வைத்து NDA கூட்டணியில் இணைக்க வேண்டும். தேவையான ஆஃபர்கள் எல்லாம் கொடுக்கலாம். ஆனால் விஜயை கூட்டணிக்கு கொண்டு வருவது மிகவும் அவசியம்” என்று அமித் ஷா வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விஜயின் வளர்ந்துவரும் இளைஞர் ஆதரவை பயன்படுத்தி தமிழகத்தில் BJP–AIADMK–TVK இணைந்த கூட்டணி புதிய சக்தியாக உருவாகலாம் என்ற நம்பிக்கை டெல்லி பாஜக தலைமைக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் BJP-யின் செல்வாக்கை விரிவுபடுத்தும் முக்கியத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த யோசனையில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. காரணம் — “விஜய் கூட்டணியில் சேர்ந்தால் அவர் மெயின் பிக்சராக மாறிவிடுவார். பிரச்சாரம் அவரைச் சுற்றி சுழலும். நாமே அவரை உயர்த்திவிடுவோம். அப்போ நமக்குத்தான் சிக்கல் வரும்” என ஈபிஎஸ் நினைக்கிறார் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, விஜய் துணை முதல்வர் பதவி அல்லது 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கக்கூடும் என்ற அச்சமும் அதிமுக உயர் நிர்வாகத்தில் நிலவுகிறது. இதனால், அமித் ஷாவின் ஆலோசனையை ஈபிஎஸ் தற்போது புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி பாஜக இதைத் தொடர்ந்து அதிமுக மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பும் டெல்லியின் திட்டமிட்ட அரசியல் நகர்வின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக கட்டுப்பாட்டை முழுமையாக தன் கையில் வைத்திருக்கவும், தமிழகத்தில் பெரிய கூட்டணியை உருவாக்கவும், டெல்லி பாஜக முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், “விஜயுடன் இணக்கமாக செல்லுங்கள், அவர்களின் பேச்சைக் கேளுங்கள், அவர்களுக்கு இடம் கொடுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி பாஜக நேரடி உத்தரவு வழங்கியுள்ளது என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Amit Shah order for Edappadi Listen to what Vijay said or else this is what will happen Will Delhi deposit a check for Edappadi