மழுப்பல்! ஓபிஎஸ் பற்றி அப்புறம்... திமுக இம்முறை 200 தொகுதிகளில் தோற்கும்...! - நயினார் நாகேந்திரன் - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. சார்பில் இன்று சென்னையில் தி. நகர் தாமஸ் ரோட்டில் ''சேவை வாரம்'' கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில் மாநில தலைவர் ''நயினார் நாகேந்திரன்' பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் அவருடன் மாவட்ட தலைவர் கிரி,மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதன் பிறகு நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது,"பா.ஜ.க. சார்பில் சுதந்திர தினத்தை வீடு தோறும் கொண்டாட வேண்டும் என்று அகில இந்திய தலைமை முடிவெடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படியில் காந்தியின் எண்ணத்திற்கு ஏற்ப கைவினைப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுப்பார்கள் என்றார்கள். எத்தனை ஆண்டுகள் கழித்து கொடுத்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியுள்ளதா? திட்டங்களில் ஸ்டாலின் பெயர் இருக்கக்கூடாது என்று நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இந்த ஆட்சி உள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அதனால்தான் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைந்துள்ளது.  பா.ஜ.க. வாக்கு திருட்டு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு கொண்டதாகும். தமிழக அரசு இப்போது கொண்டு வரும் திட்டங்களை 4 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனாலேயே புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் நயினார் நாகேந்திரனிடம், பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அதுபற்றி பின்னர் பேசலாம் என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambiguity Later about OPS DMK lose 200 seats this time Nainar Nagendran


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->