அதிமுக "தேர்தல் அறிக்கையில்" என்ன இருக்கு? போட்டுடைத்த முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக தேர்தல் அறிக்கை குழுவானது முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை அதிமுகவால் பிரிக்கப்பட்ட ஒன்பது மண்டலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றன.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் "சென்னை மண்டலத்தில் மட்டும் 512 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. வேலூர் மண்டலத்தில் 773 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. 

தமிழகம் முழுவதும் மொத்தமாக 6,571 கோரிக்கை மனுக்களை அதிமுக தேர்தல் அறிக்கை குழு பெற்றுள்ளது. இவ்வளவு இரண்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை 9 மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6,000க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுள்ளோம்.

இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் இடம்பெற்றுள்ளன. மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை பிரித்து செயலாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாகவும் அமையும் என பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK ponnaiyan vishwanathan hint about manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->