அதிமுக ஆலோசனைக் கூட்டம் செப்.10-ம் தேதிக்கு மாற்றம்! - Seithipunal
Seithipunal


அதிமுக மாநில மாநாடு கடந்த மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தின் தேதி மாற்றப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தலைமை கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வருகின்ற 04.09.2023 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம்,

தேதி மாற்றப்பட்டு 10.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 10.09.2023 அன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டு குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலோடு அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK meeting date changed to the September10th


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->