பாலியல் வன்கொடுமை வழக்கு: உச்சநீதிமன்றத்தை நாடிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ்.! - Seithipunal
Seithipunal


பெண் எஸ்.பிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு அளிக்க கோரி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை அளித்தது தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. 

இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ராஜேஷ் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் சரண் அடைய வேண்டும் எனவும் அதன் பிறகு தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க கோரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX DGP RajeshDas appeal supreme court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->