அதிமுக குழு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம்.!! இறங்கி அடிக்கும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை நேரடியாக சந்திக்க உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் அதிமுகவின் பக்கம் சாயலாம் என அரசியல் விமர்சகர் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவி வருகிறது.

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில காலம் இருப்பதால் அதிமுக கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யார் வேண்டுமானாலும் வரலாம் என அதிமுக தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் அதிமுக எஸ்டிபிஐ கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் சிறுபான்மையினர் வாக்குகள் மீண்டும் அதிமுகவின் வசம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே தேர்தல் கூட்டணி  பேச்சுவார்த்தை குழு, தேர்தல் அறிக்கை குழு, தொகுதி பங்கீடு குழு, விளம்பர குழு என 4 சிறப்பு குழுக்களை மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்திருந்தார்.

இந்த குழுக்களில் தேர்தல் அறிக்கை குழுவானது வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை தமிழக முழுவதும் மண்டலம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை ஒன்பது மண்டலாக பிரித்து பல்வேறு மக்களின் கருத்துக்களை கேட்க உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk manifesto team take opinion across tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->