நீட் ரத்து முதல் மகளிருக்கு மாதம் ரூ.3,000.. அதிமுக தேர்தல் அறிக்கை.!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். 

அந்த தேர்தல் அறிக்கையில் சுமார் 133 வாக்குறுதிகள் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

அதில் குறிப்பாக,

நீட் தேர்வுக்கு பதில் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை. 

உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

பெண்களுக்கு மாதம்தோறும் 3,000 ரூபாய்

கிளாம்பாக்கத்தில் இருந்து ஓரகடம் வரை மெட்ரோ இயக்க வலியுறுத்துவோம்.

செங்கல்பட்டு வரை மெட்ரோ நீட்டிக்க வலியுறுத்துவோம்.

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

குற்றவழக்கு சட்டங்களின் பெயரமாற்றம் நிறுத்த வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையில் எய்ம்ஸ் கொண்டுவர வேண்டும்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும். 

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் முறையில் மாற்றம் சிலிண்டர் விலை கட்டுப்பாடு

கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம்.

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை .

ஆளுநர் பதவி நிலையம் போது மாநில அரசின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை.

போதைப்பொருள் ஒழிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை.

முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல். 

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊதியம் 450 ஆக உயர்த்த வலியுறுத்தல்.

மத்திய அரசின் நிதி பகிர்வில் மத்திய மாநில திட்டங்களில் 75:25 விகிதாச்சார அடிப்படையில் மாற்றி அமைக்க வலியுறுத்தல்.

ரயில் பயண சலுகையில் பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர்கள் ,மூத்த குடிமகர்களுக்கு 50% பயண கட்டணம் மீண்டும் கொண்டுவர வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை. 

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை மத்திய அரசின் மூலமாக தடுத்து நிறுத்தப்படும். 

காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அழுத்தம் கொடுக்கப்படும். 

காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தல்.

நடந்தாய் வழி காவிரி திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல். 

கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு ஆகும் செலவு மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்.

கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் விவசாயம் மேம்பாட்டிற்காக பரம்பிக்குளம் ஆழியாறு மற்றும் பாண்டியாரு புனம்புழா ஆகிய இரண்டு திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். 

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த வலியுறுத்தல். 

குடிமராத்து திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வலியுறுத்தல்.

கச்சத்தீவை சட்ட ரீதியில் மீட்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

ஓ.பி‌சி மக்களின் கிரிமினேயர் வரம்பை 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் ‌

உயிர் காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

மருத்துவ பணியாளர்களுக்கு தனி வாரியம்.

சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.

வாஃபு வாரியம் பாதுகாக்கப்படும்.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட நல வாரியம் அமைத்திட முயல்வோம். 

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று ஆபத்தான சூழலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியினருக்கு சாலை கல்வி வசதி.

சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தென்னை மற்றும் பனை விவசாயிகளின் நலனைக் காக்க மீரா இளநீர் கரும்பு சாறு பதநீர் பனை நுங்கு ஆகியவற்றை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். 

மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை 12,000 ஆக உயர்த்தி வழங்கிட வலியுறுத்துவோம்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர தடை.

சீமை கருவேல மரங்களை அகற்ற திட்டம். 

விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்.

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம்.

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய வளர்ச்சி ஆணையத்தை செயல்படுத்த வலியுறுத்தல். 

தமிழகத்தில் பாதுகாப்பு தொடர்பான உற்பத்தி மையம் அமைத்திட வலியுறுத்தல். 

தமிழகத்தில் புதிய நகரங்கள் இடையே மெட்ரோ திட்டங்கள் விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்.

இலவச வீட்டு மனை மற்றும் வீடு கட்டும் திட்ட விதியை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தல்.

கிராம போல இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைத்திட வலியுறுத்தல். 

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.5000 வழங்க வலியுறுத்தல். 

தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகளை அமைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். 

தமிழ்நாட்டில் நான்கு வழி சாலைகளை அமைத்திட வலியுறுத்தல். 

தமிழ்நாட்டில் நான்கு இஎஸ்ஐ மருத்துவமனைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ‌

மத்திய அரசே கல்வி கடனை முழுமையாக ஏற்று தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம். 

உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அதிமுக வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK loksabha election 2024 manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->