1,76,000,00,00,000 ரூபாய் தாண்டி இமாயாலய ஊழலா? #யார்_அந்த_தம்பி? உதயநிதி தம்பி.. அதிமுக ஐடி விங்க் கேள்வி! - Seithipunal
Seithipunal


அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்தாலும், அதிகாரிகளாலும், துணை முதல்வர் உதயநிதியாலும் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்படும் இந்த ரத்தீஷ் யார்?

ரத்தீஷ் துபாய் நாட்டிற்கு தப்பிவிட்டார் என செய்திகள் வருகின்றது. ரத்தீஷ் வீட்டை ED அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

வீட்டை ED சீல் வைக்கும் அளவிற்கு, துபாய் தப்பி செல்லும் அளவிற்கு, இதுவரை மக்களுக்கு யாரென்றே தெரியாத ரத்தீஷ் பின்னால் உள்ள திமுகவின் உண்மை முகம் என்ன? #யார்_அந்த_தம்பி?

1,000 கோடி டாஸ்மாக் ஊழல் என்பது, ரத்தீஷ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் 1,76,000,00,00,000 ரூபாய் தாண்டி இமாயாலய ஊழலாகும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறதே- Are we witnessing a Scam larger than DMK's previous scams?

இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு பெரிய ஊழலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதைப் பார்த்தால் மக்களுக்கு எழக்கூடிய ஒரே கேள்வி-  #யார்_அந்த_தம்பி?

இந்த கேள்வியைக் கேட்டால் திமுகவின் சுயரூபம் வெளியே வரும் என்கிறார்கள். தொடர்ந்து கேட்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK IT Wing DMK MK Stalin TASMAC Scam ED Raid


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->