கைது செய்யப்பட்ட டாக்டர்.கிருஷ்ணசாமியை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தென் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை வழியாக விருதுநகர் சென்று கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சாலை விதிகளை மீறி பயணம் செய்ததாக கூறி காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரையில் கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியை சந்திக்க சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பதட்டமான சூழல் உண்டானது. இதனை அடுத்து காவல்துறையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் டாக்டர்.கிருஷ்ணசாமி சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுகவின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பிரச்சனையில் திமுக அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரதப் போராட்டத்தின் பொழுது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். அப்பொழுது காவல்துறையினரின் தடையும் மீறி கிருஷ்ணசாமி எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK exministers met the arrested DrKrishnasamy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->