நாளை கூடுகிறது அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்.! - Seithipunal
Seithipunal


 

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும்  முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பாற்றும் நோக்கில் காங்கிரஸும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான உத்தேச தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முன்னிட்டு தேர்தல் பணிகளை துவங்குமாறு அனைத்து மாநில தேர்தல் தலைமை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் பணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்களை அமைத்துள்ளது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் என அதிமுக தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் பொன்னையன், ஜெயராமன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி சண்முகம், செம்மலை, வளர்மதி, ஒ.எஸ் மணியன், ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் அடங்கிய குழு நாளை அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK election manifesto preparation committee meeting held tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->