அதிமுக கூட்டணியில்.. தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட்.. உறுதிப்படுத்திய பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகளும் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதியும் என ஒதுக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் களம் காண்கிறது. 

நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துவதோடு கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையின் போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க வேண்டும் என பிரேமலதா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனை அதிமுக தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுக்கு பதில் அளித்த அவர் வெற்றிலை பாக்கு மாற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK decide allocate rajya sabha seat to DMDK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->