கொங்கு மண்டலம் : சசிகலாவின் நெருங்கிய உறவினர் -  அதிகார பலத்தோடு இருந்த முக்கிய புள்ளி திடீர் மரணம்! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக இருந்த சசிகலாவின் உறவினர் ராவணன் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கல்லூரி கால நண்பர், மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர், கோடநாடு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய புள்ளி இப்படி பல்வேறு அடையாளங்களுடன் அதிமுகவினரால் கொங்கு மண்டலத்தில் பிரபலமாக இருந்த ராவணன் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். 

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன் தான் ராவணன். இவர் கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரம் ஐயர் மருத்துவமனை எதிரே உன்னால் வீட்டில் வசித்து வந்தார்.

2003-04-ம் ஆண்டுகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒட்டுமொத்த கொங்கு மண்டல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் எல்லாம் இவர் தலைமையில் தான் நடக்கும் என்று அப்போதே அதிமுக வட்டத்தில் பேசப்படும்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குடும்ப உறவுகள், நட்புகள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வருமான வரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது, ராவணனின் எந்த ஒரு இருப்பிடத்திலும் சோதனை நடக்கவில்லை என்றால், அவரின் அதிகார மையம் எதுவரை நீண்டு இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் என்கின்றனர் இவரை பற்றி அறிந்தவர்கள்.

2004 மக்களவைத் தேர்தல், 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்னர் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் ராவணனால் தேர்வு செய்யப்பட்டவர் தான் என்றும் சொல்லப்படுவது உண்டு. 

பின்னர் பல புகார், குற்றச்சாட்டு, ஒதுக்கிவைத்து மீண்டும் இணைத்துக்கொண்ட ராவணனுக்கு, 2011 ஆட்சிக்கு பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியாக உத்தரவு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு ஜெ சிறைக்கு செல்ல வாய்ப்பு வந்தபோது, ஓபிஎஸ்க்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க சசிகலா தரப்பு முடிவெடுக்க, அதில் ராவணனுக்குத்தான் அதிக பங்கிருந்ததாக ஜெயலலிதாவிடம் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

இதன்காரணமாகத்தான் சசிகலா தரப்பு மீது ஜெ நடவடிக்கை எடுத்தார் என்றும் சொல்லப்பட்டது. மேலும், ராவணனிடம் இருந்த அத்தனையும் பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி அதிகார பலத்தோடு இருந்த இராவணன், இன்று அரசியலில் ஒன்றும் இல்லாமல் திடீர் மரணம் அடைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK RAVANAN KONGU MANDALAM


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->