அடுத்து என்ன? கையில் கிடைத்த கடிதம்., ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதம் தொடர்பாக, ஓபிஎஸ் தலைமையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது சின்னத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் இரட்டை இலை சில்லத்தில் களமிறங்க உள்ளார்.

மேலும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் விருப்ப படிவத்தின்  அடிப்படையில் வேட்பாளரை தேர்ந்தெடுத்து, அதன் அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கும் படி அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி நேற்று முதல் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விருப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட செயலாளர்கள் மூலம் படிவங்கள் அனுப்பப்பட்டு இன்று மாலை 7 மணிக்குள் அதிமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவின் வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை 7 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவைத்தலைவர் அனுப்பியுள்ள கடிதம் குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரின் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடித்த வருகிறார்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர், இரட்டை இலை உள்ளிட்ட விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு 100% எதிர்ப்பு மனநிலையை கடந்து ஆதரவு அளிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். ஆக, எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு ஓபிஎஸ் தரப்பினர் ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS EPS Erode East Candidate form issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->