#BREAKING_NEWS அதிமுக எம்எல்ஏ.,மீது தாக்குதல்.,  சற்றுமுன் திமுக - அதிமுகவினர் இடையே அடிதடி., கலவரம்!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கட்சி கொடி ஏற்றுவதில் திமுக - அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து உள்ளனர். மேலும் அந்த பகுதியே கலவர பூமியாக கட்சி அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கட்சி கொடி ஏற்றுவதில் திமுக - அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கட்சிக்கொடியை முதலில் திமுகவினர் கொடியேற்ற அனுமதித்தனர். 

திமுகவினர் கொண்டிருக்கும் போதே, அதிமுகவினர் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் அங்கு கொடியேற்ற வந்தனர். அப்போது போலீசார் அதிமுக தரப்பினரை தடுத்து நிறுத்தினர். திமுக மற்றும் அதிமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த கைகலப்பு காரணமாக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் எம்எல்ஏ சின்னப்பன் அவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. அதிமுக எம்எல்ஏ தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது நெல்லை சரக டிஐஜி அதிமுக எம்எல்ஏ.,விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK MLA attacked in thoothukudi


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->