#திடீர்திருப்பம் | நாள் குறித்த தலைமை கழகம்?! அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவியேற்பு குறித்து பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த நான்கு மாதங்களுக்குள், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற பொதுகுழு கூட்டத்தில் மேலும் தேர்தல் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இது குறித்த உயர்நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், தலைமை அலுவலகம் உள்ளிட்ட சில வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு பச்சை கொடி காட்டியது நீதிமன்றம்.

இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அடுத்த 20 நாட்களுக்குள் (அக்டோபர் 17ஆம் தேதிக்குள்) அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு, அதிமுகவின் தலைமைக் கழகம் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அதிமுகவின் பொன்விழா (51 ஆம் ஆண்டு) ஆண்டு நிகழ்ச்சியானது பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK General Secretary Election date info EPS Side


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->