முன்ஜாமீன் தாக்கல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்! கைது நடவடிக்கையா?  - Seithipunal
Seithipunal


கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, கடலூர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல் குமாரமங்கலத்தை சேர்ந்தவர். இவருக்கும், இவரின் முன்னாள் உதவியாளர் குமாருக்கும் இடையே பணம்-கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

சம்பவம் நடந்த அன்று குமார் கொடுக்க வேண்டிய பணத்தை  எம்.சி.சம்பத்தின் சகோதரர் எம்.சி.தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், பழனி உள்ளிட்டோர் கேட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குமாரின் மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி ஆகியோர் தாக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி, ராஜேந்திரன், பழனி, ராதா உள்பட 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன், ராதா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எம்.சி.சம்பத் இன்று கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், தன்மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister MC Sambath Cuddalore


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?



Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?




Seithipunal