அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் மூர்த்தி வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே களமாவூரில் சென்ற ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் தந்தை, மகன் இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி இருந்தவர் மூர்த்தி தான், இதற்கிடையே சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த மூர்த்தியை வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். 

திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் களமாவூரில் உள்ள டீக்கடையில் அமைந்து டீ குடித்துக் கொண்டிருந்த மூர்த்தியை, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. 

இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சரிந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூர்த்தியை படுகொலை செய்த அந்த ஆறு பேர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex mc murder in tea shop


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal