பால்டாயில் எல்லாம் பேசுது... என்ன பண்ணறது... உதயநிதிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி!
ADMK EPS Reply to DMK Udhay
திருச்சியின் துறையூரில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார், அண்ணா திமுக கட்சி டெல்லியிலிருந்து இயங்குகிறது, அமித்ஷா வீட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது” என விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, “உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு கண்ணு தெரியவில்லை என்றால் கண்ணாடி வாங்கித் தருகிறேன். ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திமுக அலுவலகம் நல்லா இருக்கிறது, நீங்களே வந்து பாருங்கள். நீங்களும் உங்க அப்பாவும் சேர்ந்து அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்க திட்டம் போட்டீர்கள். சிலரை தூண்டி தாக்குதல் நடத்தச் செய்தீர்கள். அதன் பெயரில் அலுவலகத்துக்கு சீல் வைத்தீர்கள். ஆனால் அந்த சீலையும் உடைத்தது அண்ணா திமுக தானே!” என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் யார்? திரு கருணாநிதியின் பேரன், திரு ஸ்டாலினின் மகன் — இதைத் தவிர வேறெந்த உழைப்பு இவரிடம் இருக்கிறது? திமுகக்காக இவர் என்ன செய்துள்ளார்? நம்மைப் பற்றி பேசுகிறார், சமூக வலைத்தளங்களில் வீடியோக்களில் விமர்சனம் செய்கிறார். ‘பால்ட் ஆயில்’ எல்லாம் நம்மை பற்றி பேசுகிறது. என்ன செய்யுறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த உரை காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
English Summary
ADMK EPS Reply to DMK Udhay