மக்கள் 2026 தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin… ஒரே version தான் - அது அ.தி.மு.க. version தான்! - Seithipunal
Seithipunal


இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்று தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி!

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!

பெண்கள் பாதுகாப்பின்மைக்கு
அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!

போதைப் பொருள் கடத்தலுக்கு
திமுக அயலக அணியே சாட்சி!

போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!

ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!

Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.
இதில் இன்று Version 2.0 Loading ஆம்!

அ.தி.மு.க. ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!

2026-ல் ஒரே version தான் - அது அ.தி.மு.க. version தான்!

மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி" என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS reply to DMk Mk Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->