கஞ்சா.. சிறுவன்.. ரகளை.. துப்பாக்கி சூடு.. வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி - இபிஎஸ் கொந்தளிப்பு!
ADMK EPS Condemn to DMK MK Stalin govt Nellai gun fre police ganja
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால், சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு இருந்தாகவும் , அங்கிருந்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அவல நிலைக்கு சென்றுள்ளது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். சிறார்கள் வரை தற்போது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு,
குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது.
சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK MK Stalin govt Nellai gun fre police ganja