பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ADMK Edappadi Palaniswami election campaign dharmapuri
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி கோவையில் தொடங்கிய அவரது பிரசார பயணம், 23-ஆம் தேதி தஞ்சையில் நிறைவடைந்தது. தொடர்ந்து 2 மற்றும் 3-ஆம் கட்ட பயணங்களையும் முடித்த அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி மதுரையில் 4-ஆம் கட்டத்தைத் தொடங்கி தற்போது தொடர்ந்து வருகின்றார். இந்த பயணம் செப்டம்பர் 13-ஆம் தேதி கோவையில் நிறைவடைகிறது.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17-ஆம் தேதி தர்மபுரியில் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். அன்றைய தினம் பாப்பி ரெட்டிபட்டி மற்றும் அரூர் தொகுதிகளில் உரையாற்றவுள்ளார். 18-ஆம் தேதி பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில், 19-ஆம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார்.
20-ஆம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் தொகுதிகளில், 21-ஆம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 22-ஆம் தேதி ஓய்வு எடுத்த பிறகு, 23-ஆம் தேதி குன்னூர், ஊட்டி தொகுதிகளிலும், 24-ஆம் தேதி கூடலூர் தொகுதியிலும் பயணம் செய்கிறார்.
25-ஆம் தேதி வேடசந்தூர், கரூர் தொகுதிகளில் உரையாற்றும் எடப்பாடி பழனிசாமி, 26-ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் தனது 5-ஆம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்த வகையில் தொடர்ச்சியான சுற்றுப்பயணங்கள் மூலம் மக்களுடன் நேரடியாக சந்தித்து ஆதரவை பெறும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
English Summary
ADMK Edappadi Palaniswami election campaign dharmapuri