#BigBreaking: அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்.! சற்றுமுன் வெளியான உறுதி தகவல்.! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகிவிட்டது. 

மேலும், பாஜக, தேமுதிக, தமாக, புதிய நீதி கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று உறுதியான தகவல்கள் வெளியாயுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK CANDIDATE LIST INFO


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->