ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த அதிமுக.! பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. மூன்று தினங்களாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிய நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட பேச்சு வார்த்தையில் பாஜக தரப்பில் 50 தொகுதிகள் கேட்கபட்டதாக தெரிகிறது.

ஆனால், அதிமுக தரப்பில் 18 முதல் 20 தொகுதிகள் தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று அல்லது நாளை அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk bjp alliance march 5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->