விழாக்கோலம் பூண்ட  கோவை! ஒரே மேடையில் இபிஎஸ் ஓபிஎஸ்! அமர்க்களப்படுத்தும் எஸ்.பி.வேலுமணி!  - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று முதலமைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்க இருக்கிறது. 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் வரும் 24ம் தேதி வர இருக்கிறது. ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, கோவை சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடக்க உள்ளது. 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இந்த திருமணத்திற்காக திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களின் உறவினர்கள், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருமண ஜோடிகளுக்கு 73 வகையிலான சீர்வரிசை பொருட்களையும் வழங்குகின்றனர். 

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த விழா ஏற்பாடுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்னின்று செய்து வருகிறார். 

123 ஜோடிகள் என்பது வரும் தேர்தலில் அதிமுகவின் 123 தொகுதிகள் இலக்காக இருக்கலாம் எனவும், 73 வகையிலான சீர்வரிசைகள் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளை குறிப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK arrange marriage to 123 pair in Coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->